Monday, 23 March 2015

'வாட்டர் மேன் ஆப் இந்தியா' ராஜேந்திர சிங்கிற்கு உலகின் சிறப்பு மிக்க பரிசு வழங்கப்பட்டது.


'வாட்டர் மேன் ஆப் இந்தியா' ராஜேந்திர சிங்கிற்கு உலகின் சிறப்பு மிக்க பரிசு வழங்கப்பட்டது.
Source: Daily Thanthi. 1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதியை செய்து கொடுத்து 'வாட்டர் மேன் ஆப் இந்தியா' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்கிற்கு, இத்துறையில் சிறப்பான செயல்பாட்டிற்காக உலகின் உயர்ந்த பரிசான 'ஸ்டாக்ஹோம் வாட்டர்' பரிசு வழங்கப்பட்டது

தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சுவீடனை சேர்ந்த அமைப்பு, ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான இப்பரிசினை ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து, வளர்ந்த ராஜேந்திர சிங் பெற்று உள்ளார். ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசை வழங்கும் நடுவர், ராஜேந்திர சிங்கின் முறையில் வெள்ளங்கள் தடுக்கப்படும், ஆறுகள் மற்றும் நிலங்களை மீட்டெடுக்க முடியும், பசுமையான வனத்தினை மீண்டும் கொண்டுவர முடியும் என்று தெரிவித்து உள்ளார். 
 கிராமப்புற இந்தியாவின் நீர் பாதுகாப்பை வலுவாக்கும் விதமாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ராஜேந்திர சிங் மேற்கொண்டு வரும் கடினமுயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜேந்திர சிங் இந்தியாவின், ராஜஸ்தான் 1959ஆம் ஆண்டு பிறந்து, வளர்ந்தவர். மருத்துவ துறையில் பணியாற்றிய இவர், தண்ணீருக்காக மக்கள் படும் அவலங்களை பார்த்து, மக்களுக்கு ஹெல்த் கேரைவிட, தரமான குடிநீர் தேவை என்பதை புரிந்துக் கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தண்ணீர் தேவையினை பாரம்பரிய முறைகளை பயன்படுத்தியே பூர்த்தி செய்து உள்ளார். பாரம்பரிய முறைகள் மீது வறண்டு கிடந்த கிணறுகளை நீரால் நிரப்பினார். இதுபோன்று பொதுமக்கள் மற்றும் பெண்கள் உதவியுடன் மழைநீரை சேகரிப்பது, நீர்நிலைகளை புணரமைப்பது மற்றும் நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய முறையினை பயன்படுத்தி நீர்வளத்தை பெருக்குதல் ஆகிய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். 
 
 முதலில் குடிநீருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்ட இவர், பின்னர் ஏரிகள், ஆறுகள், வெள்ளத்தடுப்பு என தன்கவனத்தை திருப்பி செயல்பட தொடங்கினார். நிலத்தடி நீர் விவசாயிகளால் உறிஞ்சப்படுகிறது, தண்ணீர் வற்றுகிறது. பயிர்கள் விளையாமல் போகிறது. ஆறுகள், வனங்கள் காணாமல் போகிறது. மக்கள் நகர்புறங்களை நோக்கி செல்கின்றனர் . இந்நிலையில் சிங் பேசுகையில், “எப்போது நாங்கள் எங்களுடைய பணிகளை தொடங்குகிறோமோ, நாங்கள் குடிநீர் பிரச்சனையையே பார்க்கிறோம், எப்படி அதனை தீர்க்க வேண்டும் என்று ஆய்வு செய்வோம்,” என்று கூறினார்.

தற்போது எங்களுடைய குறிக்கோள் மிகவும் உயர்வானது. நீர் இந்த நூற்றாண்டு சுரண்டல், மாசு மற்றும் அத்துமீறல்களாக உள்ளது. இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும், தண்ணீர் மீதான போரை அமைதியாக மாற்ற வேண்டும், இதுவே என்னுடைய இலக்கு என்று ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...