Monday, 23 March 2015

ராஜஸ்தானில் பியூன் வேலைக்காக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. ஹீரா லால் வர்மா மகன்

ராஜஸ்தானில் பியூன் வேலைக்காக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. ஹீரா லால் வர்மா மகன்

Source: Tamil CNN. peon(1)ராஜஸ்தானில் உள்ள எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் பியூன் வேலைக்காக வரிசையில் நின்று நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார். தற்போதைய அரசியல்வாதிகள் தனக்கும், தனது குடும்பத்தினருக்கு சொத்துக்களை சேர்ப்பதிலும், தனது வாரிசுகளை தன்னைப்போல் அரசியல்வாதி ஆக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால், ராஜஸ்தானில் உள்ள எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் பியூன் வேலைக்காக நேர்முகத் தேர்வை சந்தித்து வரும் அதிசயம் நடந்து உள்ளது.
ராஜஸ்தான் மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பில் பியூன் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஆக்ராவில் நடைபெற்றது. இந்த வேலைக்காக அம்மாநில தோக் தொகுதி எம்.எல்.ஏ. ஹீரா லால் வர்மாவின் மகன் ஹன்ஸ்ராஜ் என்பவர் வரிசையில் காத்திருந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. ஹீரா லால் வர்மா கூறுகையில், ”எனது பிள்ளைகள் தவறான வழியில் ஈடுபட்டு வசதியான வாழ்க்கை வாழ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். எனது மகன் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறான். எனவே, தற்போது தனியார் கிளினிக் ஒன்றில் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறான்.
அவனது வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவனை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் படி கூறினேன். அவன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டிருக்கிறான். அதிகாரிகளும் நல்லபடியாக பதில் சொன்னதாக கூறி இருக்கிறான்” என்றார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...