Friday, 13 March 2015

வனப்பகுதியில் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

வனப்பகுதியில் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Source: Tamil CNN. ffஹோண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு மண்ணுக்குள் புகுந்த பழங்கால நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரத்தை கண்டுபிடித்தனர். இது கி.பி. 1000–வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நகரத்துக்கு வெள்ளை நகரம் அல்லது குரங்கு கடவுள் நகரம் என பெயரிடப்பட்டுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதையுண்ட நகரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஹோண்டுராஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment