Friday, 13 March 2015

600 மருத்துவர்களை சிரிய அரசே படுகொலை செய்ததாக பகீர் குற்றச்சாட்டு

600 மருத்துவர்களை சிரிய அரசே படுகொலை செய்ததாக பகீர் குற்றச்சாட்டு

Source: Tamil CNN. rrrசிரியாவின் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலால், 600 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இறந்திருக்கலாம் என்று நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில், அரசு படைகள் மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் நடத்திய தாக்குதலின் போது, போரினால் மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களும், அவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி அந்த அமைப்பின் இயக்குனர் ஏரின் ஹல்கர் கூறும் போது “போரின் போது மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம். ஆனால் சிரியாவின் அரசுப்படைகள் எதைப்பற்றியும் கவலைபடாமல் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்ற செவிலியர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது” என தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது முதல் இன்று வரை சுமார் 15,000 மருத்துவர்களும், பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்களும் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத சிரிய மருத்துவர் ஒருவர் கூறும் போது “ஒரு உயிரை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் போது கூட நாங்கள் கொல்லப்படலாம். எங்கள் உயிருக்கு இந்த நாட்டில் எந்த உத்திரவாதமும் இல்லை” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment