1. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு, அரசின் செயல்பாடின்மையே காரணம்
2. சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து அந்நாட்டு கிறிஸ்தவர்கள் கவலை
3. ஒழுக்க ரீதி அமைப்பு முறைகளை மனித சுதந்திரத்திற்கு எதிரானவை அல்ல
4. கென்யாவில் கத்தோலிக்க குரு கொலை செய்யப்பட்டுள்ளார்.
5. இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவி
6. வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் : கலாம்
7. எதிர்காலத்தைப் பற்றிய நல்ல செய்திகளைப் பகுத்தறியும் திறன் மனிதர்களின் மூளையில் உள்ளது
8. காற்று மாசுபாட்டால் சிசு வளர்ச்சி பாதிப்படையும்: ஆய்வில் தகவல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு, அரசின் செயல்பாடின்மையே காரணம்
அக் 11, 2011. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலுக்கும் இரத்தம் சிந்தல்களுக்கும் அந்நாட்டு அரசின் செயல்பாடின்மையே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர் தலத்திருச்சபைத் தலைவர்கள்.
எகிப்தில் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் சட்டத்தின் ஆட்சி, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றார் ஆயர் அந்தோனியுஸ் மினா.
கிறிஸ்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதி ஊர்வலம் நடத்திய கிறிஸ்தவர்கள் மீது முதலில் இஸ்லாமிய தீவிரவாதிகளும் பின்னர் எகிப்து இராணுவமும் தாக்குதல் நடத்தி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும் 200 பேர் காயமடைதலுக்கும் காரணமானது குறித்து கருத்து வெளியிட்ட குரு Rafic Greiche, கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல பல இஸ்லாமியர்களும் நாட்டின் வருங்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அதனால் பாதிக்கப்பட்ட மற்றும் பலியான மக்களுக்கென மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda.
இந்த மூன்று நாட்களும் செபத்திலும் உண்ணா நோன்பிலும் செலவழிக்கப்படும் எனவும் அறிவித்தார் அவர்.
2. சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து அந்நாட்டு கிறிஸ்தவர்கள் கவலை
அக் 11, 2011. சிரிய நாட்டு அரசு வீழ்ச்சியடைந்து அதன் வழி உள்நாட்டு போர் இடம்பெற்றால் அது கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரும் தீமைகளைக் கொணரும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார் சிரியாக் கத்தோலிக்க சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் Younan Ignatius Joseph.
கடவுளின் பெயரால் இடம்பெறும் போர் என்பது அரசியல் போராட்டத்தைவிட பெரும் தீமைகளைக் கொணர்வதாக இருக்கும் என்று கூறிய முதுபெரும் தலைவர், சிரியாவிற்கு தேவைப்படுவது அரசியல் சீர்திருத்தங்களேயொழிய, மோதல்கள் வழியான ஆட்சி மாற்றம் அல்ல என்றார்.
பல கட்சிகள் கொண்ட அரசியல் அமைப்பு, கருத்துச்சுதந்திரம் என பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் தேவைப்படுவதாகவும், அதற்கு மேற்கத்திய நாடுகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் முதுபெரும் தலைவர் Younan.
3. ஒழுக்க ரீதி அமைப்பு முறைகளை மனித சுதந்திரத்திற்கு எதிரானவை அல்ல
அக் 11, 2011. ஒழுக்க ரீதி அமைப்பு முறைகள் மனித சுதந்திரத்திற்கு எதிரானவை என்ற கண்ணோட்டமே ஸ்காட்லாந்தின் ஒரே பாலின திருமண ஆதரவுக்கான மூல காரணமாக உள்ளது என குற்றம் சாட்டினார் அந்நாட்டு பேராயர் மாரியோ கோந்தி.
திருமணத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை ஸ்காட்லாந்தின் அனைத்து பங்குதளங்களும் மேற்கொண்டு வருவது குறித்து எடுத்துரைத்த Glasgow பேராயர், தவறான பாலின நடவடிக்கை தொடர்புடைய செயல்பாடுகளில் இன்றைய சமூகத்தின் சகிப்புத்தனமைகள் அதிகரித்து வருவதை குறித்து தன் கவலையையும் வெளியிட்டார்.
ஒழுக்க ரீதி கொள்கைகளை மனித சுதந்திரத்திற்கு எதிரானவைகளாகவும், தவறான நடவடிக்கைகளை மனித உரிமையின் ஒரு பகுதியாகவும் நோக்கும் இன்றைய போக்கு குறித்த கேள்விகளையும் எழுப்பினார் பேராயர் கோந்தி.
ஒரே பாலின திருமணங்களை அனுமதிப்பது குறித்து ஸ்காட்லாந்து அரசு ஆலோசனைகளை நடத்தி வருவதையொட்டி தன் கருத்துக்களை இவ்வாறு வெளியிட்டுள்ளார் பேராயர்.
4. கென்யாவில் கத்தோலிக்க குரு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அக் 11, 2011. கென்யாவின் நைரோபியில் தன் உறவினர் ஒருவரை சந்திக்கச் சென்ற வழியில் திருடர்களால் வழிமறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் அந்நாட்டு குரு ஒருவர்.
இத்திங்கள் இரவு கொலைச் செய்யப்பட்டுள்ள குரு James Kiser Awuor, கென்யாவின் Kisumu உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Zacchaeus Okothன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையிலேயே உரோம் நகரில் தன் மேற்படிப்பை முடித்து தாயகம் திரும்பிய குரு James, நைரோபி சேரிப்பகுதிகளின் வன்முறை குறித்து அறியாதிருந்திருக்கலாம் என்கிறது மிஸ்னா செய்தி நிறுவனம்.
5. இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவி
அக் 11, 2011. இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 1கோடியே 47 இலட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளது.
தனியார் துறை முதலீடுகளை அதிகரித்தல், உள்ளூராட்சி நிர்வாக பங்களிப்பை மேம்படுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில், யூஎஸ் எயிட் நிறுவனத்தின் வழியாக இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
நாட்டின் சட்டத்துறையை மேம்படுத்துவதற்கும் அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment