Saturday, 9 April 2011

சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்றத் தேர்தல்களுக்கான தொகுதி உடன்பாட்டில் பலரது கவனத்தையும் கவர்ந்த விடயம், தலைநகரிலுள்ள 16 தொகுதிகளில் 8 தொகுதிகளை ஆளும் திமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்தது தான்.
தவிரவும், முதல்வர் கருணாநிதி சென்னையை விட்டு திருவாரூரில் போட்டியிட முடிவெடுத்ததும், மூத்த அமைச்சர் அன்பழகனும், துணை முதல்வர் ஸ்டாலினும் சென்னைக்குள்ளேயே தொகுதி மாறியதும் பலரை வியப்புக்குள்ளாக்கியது.
திமுகவின் கோட்டையாகவே சென்னை கருதப்பட்டுவந்தது
'கோட்டை'- இம்முறை செல்வாக்கு எவ்வாறு எதிரொலிக்கும்?
திமுகவின் கோட்டையாகவே தலைநகர் எப்போதும் கருதப்பட்டு வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் கூட, மாநில அளவில் தோல்வியுற்றாலும், திமுக சென்னயில் மிக அதிக தொகுதிகளை வெல்வது வழக்கம்.
நலத்திட்டங்கள்-குடும்ப ஆதிக்கம்
பொதுவாக நலத் திட்டங்கள் சரிவர அமல் படுத்தப்படவும் ஓரளவேனும் நிவாரணம் கிடைக்கவும் திமுக ஆட்சியில் வாய்ப்புக்கள் அதிகம் என்றே மக்கள் நினைத்தாலும், ஊழல், முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் போன்றவை இப்போது மாநகர மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியிருப்பதும் உண்மை.
'குடும்ப ஆதிக்கம்' - ஜெயலலிதா பிரசாரம்
'குடும்ப ஆதிக்கம்' - ஜெயலலிதா பிரசாரம்
பொருளாதார வல்லுநர் எம்.ஆர்.வெங்கடேஷ் கட்சி ஆதிக்கம் தொழில் துறையினையும் பாதித்திருக்கிறது என்கிறார்.
அ இஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தனது சென்னைப் பிரச்சாரத்தில் குடும்ப ஆதிக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அத்தகைய பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, பல்வேறு கட்டுமானப் பணிகள், அழகு படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செவ்வனே நிறைவேற்றியதாகவே கருதப்படுகிறது.
மாநகராட்சிப் பணிகள் செயல்பாட்டிற்கு அப்பால், திமுக மாநகரமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டினை முதல்வர் கருணாநிதி ஒரு கட்சிக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்ததாகவும் திமுக தோற்றால் அதற்கு அவர்களே காரணமாயிருப்பார்கள் என்று கூறியதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாயின.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...