Saturday 9 April 2011

புதிய ஊழல்தடுப்புச் சட்ட......

இந்தியாவில் புதிய ஊழல்தடுப்புச் சட்டத்தை வரைவதற்காக அமைக்கப்படும் குழுவில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலரையும் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.
காந்தியவாதியும் செல்வாக்கு மிக்க சமூகநல ஆர்வலருமான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை போதுமா என்பது தெளிவில்லை.
70 வயதான அன்னா ஹசாரே ஊழல்களுக்கு எதிரான தனது உண்ணா விரதப் போராட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக தொடர்ந்தார்.
சட்டவரைவு குழுவில் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டுமென்பது அவரது கோரிக்கைகளில் ஒன்று.
ஊழல் முறியடைப்புச் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமென வலியிறுத்தும் ஹசாரேயின் போராட்டம் இந்தியா முழுவதும் பெரும் ஆதரவாளர்களை திரட்டியுள்ளது.
ஹசாரேவின் உண்ணா விரதப் போராட்டத்திற்குச் சமாந்தரமாக பேரணிகளும் கண்டன ஊர்வலங்களும் அங்கு நடைபெற்றுவருகின்றன.
ஊழல் குற்றச்சாட்டுகளாலும் விசாரணைகளாலும் பெரும் அழுத்தத்தை சந்திருந்த ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஹசாரேவின் போராட்டம் இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, ஹசாரேவின் கோரிக்கைகளுக்கு இணங்குவது தனக்கே பாதகமாக அமைந்துவிடும் என்று அரசாங்கம் அஞ்சுவதாக விமர்சகர்கள் பலரும் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...