Thursday, 18 June 2020

மனச்சான்றின் சுதந்திரம் எல்லா வேளைகளிலும் மதிக்கப்பட...

போர்த்துக்கல் நாட்டு அரசியல் மேதை Aristides de Sousa Mendes

போர்த்துக்கல் நாட்டு அரசியல் மேதை Aristides de Sousa Mendes அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட உலக மனச்சான்றின் நாள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
இறைவேண்டலை மையப்படுத்தி தன் புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வழங்கிய ஒரு கருத்தை, தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டார்.
"இறைவேண்டல் என்பது, இவ்வுலகிற்காக பரிந்துபேசுதல். நமது இறைவேண்டல் எவ்வளவுதான் வலுவற்றதாக இருந்தாலும், அது, எப்போதும் கடவுளுக்கு உரியது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், மோசேயின் இறைவேண்டல் குறித்து தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், ஜூன் 17ம் தேதி, இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்படும், 'உலக மனச்சான்றின் நாள்' குறித்து நினைவூட்டினார்.
போர்த்துக்கல் நாட்டு அரசியல் மேதை Aristides de Sousa Mendes அவர்களின் வாழ்வு சாட்சியத்தால் தூண்டப்பட்டதாக இந்நாள் உருவாக்கபப்ட்டது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எண்பது ஆண்டுகளுக்கு முன்னால், தன் மனச்சான்றின் குரலுக்கு அடிஅணிந்து, அதனைப் பின்பற்ற முடிவுசெய்த Mendes அவர்களைப்பற்றி குறிப்பிட்டார்.
தன் மனச்சான்றின் குரலுக்கு செவிமடுத்த Mendes அவர்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான யூதர்களையும், ஏனைய மக்களையும் காப்பாற்றினார், என்பதைச் சுட்டிக்காட்டி, மனச்சான்றின் சுதந்திரம் எல்லா வேளைகளிலும், எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவதாக என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை.
இறைவார்த்தையால் ஒளிர்விக்கப்பட்டு, நிமிர்ந்து நிற்கும் மனச்சான்றை கொண்டிருப்பதில், ஒவ்வொரு கிறிஸ்தவரும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் எனவும் அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளை மறு நாள், வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட உள்ள இயேசுவின் திரு இருதய விழா குறித்தும் நினைவூட்டினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...