Thursday, 18 June 2020

ஆசியாவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆசியாவின் அணு ஆயுதங்கள்

உலகிலுள்ள அணு ஆயுதங்களில் 90 விழுக்காடு, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கைவசம் உள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்
உலக அளவில் மொத்தமாகப் பார்க்கும்போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும், ஆசியாவில் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருவதாக, SIPRI என்றழைக்கப்படும், Stockholm உலக அமைதி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உலகில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13,865 என்ற எண்ணிக்கையிலிருந்து 13,400 ஆக குறைந்துள்ளதற்கு அமெரிக்க ஐக்கிய நாடும் இரஷ்யாவுமே காரணம் என பாராட்டும், ஸ்டாக்ஹோமை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக அமைதி ஆய்வு மையம், சீனாவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 290 என்பதிலிருந்து 320 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் அணு ஆயுத கையிருப்பு எண்ணிக்கையில் மாற்றமில்லை என கூறும் இந்த மையம், பாகிஸ்தான், இந்தியா, மற்றும், வட கொரியாவில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது
இஸ்ரேல் நாட்டில் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறும், இந்த உலக அமைதி ஆய்வு மையம், உலகிலுள்ள அணு ஆயுதங்களுள் 90 விழுக்காடு, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கைவசம் உள்ளது எனவும், தன் அறிக்கையில் கூறியுள்ளது. (AsiaNews)

No comments:

Post a Comment