Tuesday, 23 June 2020

கோவிட்-19 காலத்தில் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட

தேவநிந்தனை தண்டனை சட்டத்திற்கு ஆதரவு குரல்

பாகிஸ்தானில் தேவ நிந்தனை குற்றச்சாட்டின்கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் 24 கிறிஸ்தவர்களும் விடுவிக்கப்பட அந்நாட்டின் தேசிய கிறிஸ்தவ கட்சி விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 கொள்ளைநோயைக் காரணம் காட்டி, பல சிறைக்கைதிகள் பல நாடுகளில் விடுவிக்கப்படுவதுபோல், பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றசாட்டின்பேரில் சிறைவைக்கப்பட்டுள்ளோர், விடுவிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, அந்நாட்டின் தேசிய கிறிஸ்தவ கட்சி.
தேவநிந்தனைக் குற்றத்திற்கு உள்ளாகி,. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் 24 கைதிகள், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை முன் வைத்துள்ள பாகிஸ்தானின் தேசிய கிறிஸ்தவ கட்சி, இளவயது பெண்கள் கடத்தப்படுவது, மற்றும், கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவது குறித்த கவலையையும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த ஈரான் நாட்டவர்களும், பிற கைதிகளும் கொரோனா தொற்றுநோய் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தேசிய கிறிஸ்தவ கடசியின் தலைவர் Shabir Shafqat அவர்கள், சிறுபான்மையினர் குறித்து பாகிஸ்தானில் எவ்வித இரக்கமும் காட்டப்படுவதில்லை எனவும், தேவநிந்தனை குற்றச்சாட்டின்கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் 24 கிறிஸ்தவர்களும், ஏனைய கைதிகள் கொரோனா நோய் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளதுபோல், விடுவிக்கப்பட்டவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் 2004ம் ஆண்டிலிருந்து, 4,500 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு, 515 பேருக்கு மரணதணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (AsiaNews)
 

No comments:

Post a Comment