Thursday, 12 March 2015

உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 7ஆவது இடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 7ஆவது இடம்

Source: Tamil CNN. rupeesஉலக அளவில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 ஆவது இடத்தைப் பிடித்து உள்ளதாக நைட் பிராங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் அந்நிறுவனம், ” 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் பெரும் பணக்காரர்களில் ஏராளமானோர் மும்பையைச் சுற்றி வாழ்கின்றனர். இதன் காரணமாகவே மும்பை நிதி தலைநகராகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாது உலகளவில் மல்டி மில்லினியர்கள் வாழும் நகரங்களின் வரிசையில் மும்பை 6 ஆவது இடத்திலும் உள்ளது.
மும்பையை அடுத்து அதிக பணக்காரர்களைக் கொண்ட நகரங்களாக புதுடெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் அதிக பெருங் கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளாக அமெரிக்கா சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதும், அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரி்த்து வருவதும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment