Wednesday 13 July 2011

Catholic News - hottest and latest - 11 July 2011

1.  கடவுள், உண்மை மற்றும் நன்மைத்தனம் வழி மக்களைத் தன்பால் கவர்கிறார் - திருத்தந்தை

2. இயற்கையை மதிப்பது குறித்து பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய பெற்றோரின் கடமை

3. "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' : மகாராஷ்டிராவில் விழிப்புணர்வு பிரச்சாரம்

4. குழந்தைகளின் எதிர்கால வாழ்வைச் சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல்

5. கொலைக் குற்றவாளிகளில் பாதிப்பேர் பெண்கள்: திகார் சிறை அதிகாரி தகவல்

6. வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவில் மிக அதிகம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை கடவுள், உண்மை மற்றும் நன்மைத்தனம் வழி மக்களைத் தன்பால் கவர்கிறார்
ஜூலை11,2011. தன்னில் விசுவாசம் கொள்ளும்படி எவரையும் கடவுள் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் உண்மை மற்றும் நன்மைத்தனம் வழி மக்களைத் தன்பால் கவர்கிறார் என இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, அன்பு எப்போதும் சுதந்திரத்தை மதிக்கக்கூடியது என எடுத்துரைத்தார். காஸ்தல் கந்தோல்ஃபோவிலுள்ள திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசு உவமைகளில் பேசியதன் காரணம் குறித்து தன் சீடர்களுக்கு விளக்கிய இஞ்ஞாயிறு வாசகம் குறித்து தன் கருத்துக்களை அளித்தார்.
பொதுமக்களுக்கென இயேசு வழங்கிய உவமைகள், விளக்கத்தைப் பெறுவதற்கான மக்களின் முயற்சியை எதிர்பார்ப்பதுடன், பகுத்தறிவையும் சுதந்திரத்தையும் ஈடுபடுத்துவதாக‌ இருக்கும் என மேலும் கூறினார் பாப்பிறை.
செவிமடுப்பவர்களைத் தன்பால் இழுப்பதையும், தன்பால் திரும்புபவர்களுக்கு குணமளித்தலின் உறுதியை வழங்குதையும் இயேசுவின் உவமைகள் நோக்கம் கொண்டிருந்தன எனவும் கூறினார் பாப்பிறை.
கடவுளின் உண்மையான உவமை இயேசுவே என்ற பாப்பிறை, தன்னில் விசுவாசம் கொள்ளும்படி எவரையும் கடவுள் கட்டாயப்படுத்துவதில்லை, ஏனெனில் அன்பு சுதந்திரத்தை மதிக்கிறது, அதேவேளை இறைவனோ, உண்மை மற்றும் நன்மைத்தனம் வழி மக்களைத் தன்பால் கவர்கிறார் என மேலும் எடுத்துரைத்தார்.

2. இயற்கையை மதிப்பது குறித்து பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய பெற்றோரின் கடமை

ஜூலை 11,2011. இயற்கையை மதித்து வாழ்வது குறித்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செபத்தை மக்களுடன் இணைந்து செபித்தபின் இவ்விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, இந்த கோடை விடுமுறைக் காலத்தில் இயற்கையின் அழகையும் அற்புதத்தையும் குறித்துச் சிந்தித்து, உணர்வுகளை உயிரோட்டமுடையதாக வைத்திருக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இறைவன் வழங்கியுள்ள மிகப்பெரும் கொடையான இயற்கையை இரசிக்கவும், மதிக்கவும், பாதுகாக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பெற்றோரின் கடமையையும் வலியுறுத்தினார் பாப்பிறை.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கடல் ஞாயிறு குறித்தும் எடுத்துரைத்த
அவர், மாலுமிகள், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களிடையே மேய்ப்புப் பணியாற்றுவோரைச் சிறப்பான விதத்தில் நினைவு கூர்வதாகத் தெரிவித்தார்.
கடற்கொள்ளைக்காரர்களின் பிடியிலிருக்கும் மாலுமிகளுக்கானத் தன் செப உறுதிப்பாட்டையும் இம்மூவேளை செப உரையின் போது எடுத்துரைத்தார் பாப்பிறை.

3. "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' : மகாராஷ்டிராவில் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஜூலை11,2011.    "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்ற பெயரில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றைத் துவக்கி வைத்துள்ளார் மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவான்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...