மன்னாரில் ‘தேவ அழைத்தல்’ எனும் கருப்பொருளில் கண்காட்சி! ஆரம்பித்து வைத்தார் மன்னார் ஆயர்
குறித்த காண்காட்சியினை மன்னார் மறை மாவட்ட பங்கு மக்கள் ஏற்பாடு செய்துதிருந்தனர்.
-குறித்த கண்காட்சியில் காத்தோழிக்க மக்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு சிறு நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.
குறித்த கண்காட்சி இன்று சனிக்கிழமை(30) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை(31) ஆகிய இரு தினங்களும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிததுள்ளனர்.
மன்னார் மடுமாதா சிறிய குருமடம் ஸ்தாபிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்தியடையும் நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிவிழா கொண்டாடப்படவுள்ளது.
-வெள்ளிவிழா திருப்பலியினை எதிர்வரும் 15ம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டு திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
No comments:
Post a Comment