மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வு
மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்நிகழ்வுக்கு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் மஹாதேவ சர்மா தர்மகுமார குருக்கள் தலைமை தாங்குகிறார்.
தமிழ்ச் சங்கத்தின் சிரேஸ்ர உபதலைவர் ஜனாப் மக்கள் காதர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். தமிழ்ச் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் அவர்கள் சிறப்புரை ஆற்றுகின்றார். நிர்வாக உறுப்பினர் திரு. தே. பி. சிந்தாத்துரை நன்றியுரை ஆற்றுகின்றார்.
தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி மன்னார் தமிழ்ச் சங்கம் அனைவரையும் அழைத்து நிற்கின்றது.
மன்னார் நிருபர்-
No comments:
Post a Comment