Tuesday, 3 June 2014

இளம்பெண் பலாத்காரம் செய்து ஆசிட் ஊற்றிக் கொலை! உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி

இளம்பெண் பலாத்காரம் செய்து ஆசிட் ஊற்றிக் கொலை! உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி

Source: Tamil CNN
 raped
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 22 வயது இளம்பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேபரேலி பகுதியில் உள்ள பகேரி என்ற இடத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணில் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட் ஊற்றிய மர்ம கும்பல், பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் முகம் சிதைந்த நிலையில், ஆய்திபுரா கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தின் மீது ஆசிட் மற்றும் பெட்ரோலை ஊற்றியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட சீனியர் போலீஸ் எஸ்.பி. ரவீந்திர கவுர், பலாத்காரத்திற்கு ஆளாகி கொல்லப்பட்ட பெண் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று கருதுவதாகவும், எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் குழு ஒன்று அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்தவாரம் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேற்கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment