Friday, 27 June 2014

பான் கி மூன் விட்ட இடத்திலிருந்து ஐ.நா விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும்! மன்னிப்புச் சபை வேண்டுகோள்

பான் கி மூன் விட்ட இடத்திலிருந்து ஐ.நா விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும்! மன்னிப்புச் சபை வேண்டுகோள்

Source: Tamil CNN.
 amnesty-international-logo
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
அக்குழுவினர் நம்பகத் தன்மை மிக்க தகவல்களை பெற்றுக் கொண்டனர். அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கையில் யுத்த குற்றமும் மனித குலத்திற்கு எதிரான குற்றமும் இடம்பெற்றதை உறுதிப்படுத்தப்படும்.
தற்போதைய விசாரணைகள் மிக ஆழமாக முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றச் செயல்களுக்கு காரணமான தளபதிகள், அவர்களது உயரதிகாரிகள் போன்றோரும் விசாரிக்கப் படவேண்டும் எனவும் கோரியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கை அரசாங்கத்தை விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு மீண்டும் வேணடுகோள் விடுத்துள்ளது.
விசாரணைகள் வலுவானவை ஆகவும், ஆழமானவையாகவும் அமைவதற்கான அரசியல் மற்றும் ஏனைய ஆதரவை ஐ.நாவும், சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும். சாட்சியங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...