Friday, 13 June 2014

நைஜிரியா தாக்குதலில் கிறிஸ்தவ ஆலயங்கள் தகர்ப்பு, 11 பேர் பலி

நைஜிரியா தாக்குதலில் கிறிஸ்தவ ஆலயங்கள் தகர்ப்பு, 11 பேர் பலி

Source: Tamil CNN. மத்திய நைஜிரியாவில் இரண்டு சமூகங்களை சேர்ந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகினர் என்று பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பிளேத்வு மாநிலத்தில் காகோ மற்றும் தஞ்ஜோல் பிரிவினர் நடத்திய தாக்குதலில் 6 பொதுமக்கள் மற்றும் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரையில் 6 பேரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் பதிலடி தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். மாநிலத்தை தொற்றிக் கொண்டுள்ள இன, மத வன்முறையின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் இரண்டு கிறிஸ்துவ ஆலயங்கள் தகர்க்கப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மந்திய நைஜிரியாவில் அமைந்துள்ள பிளேத்வு மாநிலத்தில் வடக்கு பகுதியில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தெற்கு பகுதியில் கிறிஸ்துவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டும் மாநில தலைநகர் ஜோஸில் முந்தைய கொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக இஸ்லாமியர்கள் மற்றும் கிரிஸ்துவர்கள் இடையே மதக்கலரம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் 20ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
1
2
3

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...