Thursday, 12 June 2014

புற்று நோய்க்கு மருந்தாகும் திராட்சை

புற்று நோய்க்கு மருந்தாகும் திராட்சை

 grape-juice
Source: Tamil CNN.
திராட்சைப் பழத்தில் ‘வைட்டமின் ஈ’ மற்றும் ‘வைட்டமின் சி இருக்கிறது. குடல் சம்பந்தப்பட்டக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு திராட்சை ஒரு அருமருந்து!
தினமும் ஒரு டம்ளர் கருநீலத் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் குணமாகும். முற்றிய புற்றுநோயின் வீரியத்தையும் குறைக்கும்.
ஒரு கப் பச்சை திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி போன்றவை விரைவில் குணமாகும்.
பச்சை திராட்சையை ஜூஸாக்கி சாப்பிட்டால் நாக்கு மற்றும் வாயில் ஏற்படும் புண் சரியாகும்.
காய்ந்த திராட்சையை பசும்பாலில் ஊற வைத்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுங்கள். இது குழந்தைகளின் தசை வளர்ச்சியை சீராக்குவதுடன் எலும்புகளையும் வலுப்படுத்தும், மேலும் சளி, இருமல் இருந்தால் அதையும் போக்கும்.
காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் 4 அல்லது 5 காய்ந்த திராட்சையை ஊற வையுங்கள். ஊறிய திராட்சையை நன்றாகப் பிழிந்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி பல் முளைக்காத சின்ன குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். இப்படி தினமும் செய்துவர, குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...