Thursday, 19 June 2014

அணுசக்தியின் தந்தை ஹோமி பாபாவின் வீடு ரூ.372 கோடிக்கு ஏலம்

அணுசக்தியின் தந்தை ஹோமி பாபாவின் வீடு ரூ.372 கோடிக்கு ஏலம்

source: Tamil CNN.
மெஹரங்கீர் என்று பெயரிடப்பட்ட ஹோமி பாபாவின் வீடு மலபார் ஹில் பகுதியில் உள்ளது. அணு சக்தியின் தந்தையான பாபா 1966 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்தவுடன் அந்த வீடு, கலை மற்றும் கலாச்சாரத்தின் புரவலராக இருந்த அவரது சகோதரரான ஜம்ஷெத்தின் வசம் வந்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜம்ஷெத் மறைந்த பின் அந்த சொத்து அவர் பராமரித்து வந்த கலைகளுக்கான தேசிய மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அம்மையம் அந்த வீட்டை ஏலத்தில் விற்க தீர்மானித்தது. ஏலத்தில் அந்த வீடு 372 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்த வீட்டை யார் ஏலத்தில் எடுத்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் அந்த வீட்டை விற்க தடை விதிக்கவேண்டும் என்று பாபா அணுசக்தி நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் வீட்டை விற்பதற்கெதிராக தடை விதிக்க மறுத்துவிட்டது.
மூன்றடுக்கு கட்டிட அமைப்பு கொண்ட அந்த வீடு 1593 சதுர மீட்டர் கொண்ட மனையில் 15000 சதுர அடியில் கட்டப்பட்டது. அந்த வீட்டிலிருந்து கடலின் அழகான காட்சியை காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
1
2
3

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...