Tuesday, 3 June 2014

சிறுமிகளை கற்பழித்து நாயின் மலம் சாப்பிட வைத்த கொடூரன்

சிறுமிகளை கற்பழித்து நாயின் மலம் சாப்பிட வைத்த கொடூரன்

source: Tamil CNN
 tamil
மும்பை அருகே உள்ள கஜ்ரத் பகுதியை சேர்ந்தவர் அஜித் டபோல்கர். அவர் அங்கு ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகளுக்கான தங்குமிடத்துடன் கூடிய கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த தங்குமிடத்தில் தங்கியிருந்த 4 முதல் 16 வயது வரை கொண்ட 32 பேரில் ஐந்து சிறுமிகளை கற்பழித்ததுடன் நாய் மலத்தை சாப்பிட வைத்து கொடுமை செய்துள்ளார் டபோல்கர். இவருக்கு உடந்தையாக லலிதா டோன்டா என்ற பெண்மணியும் செயல்பட்டுள்ளார்.
அந்த இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளில் இருவர் விடுமுறையின் போது தங்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். அப்படி சென்றவர்கள் தங்குமிடத்திற்கு திரும்பாமல் தவிர்த்துவிட்டனர். இதற்கு என்ன காரணம் என சில சமூக ஆர்வலர்கள் விசாரித்தபோது தான் இந்த கொடூரமான சம்பவம் வெளியே தெரிந்தது.
உடனே காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளியையும் ஒரே காரில் நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் ஏற்றி வந்தது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே இவ்வழக்கை குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மூன்று மாணவிகளும், இரண்டு மாணவர்களும் வாக்குமூலம் அளித்தனர். அதில் தங்களுக்கு ஆபாச படங்கள் காண்பிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை இருட்டறையில் அடைப்பதுடன், கடுமையான வெயிலில் வெறுந்தரையில் நிற்க வைத்துள்ளனர்.
மேலும் நாயின் மலத்தை உண்ணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். நாயின் மலத்தை தின்ற சிறுமிகள் வாந்தியெடுத்தபோது அந்த வாந்தியையும் உண்ணுமாறு கட்டாயப்படுத்தி கொடுமை செய்து கிட்டத்தட்ட அரக்கனை போல் இருவரும் நடந்துகொண்டுள்ளனர். இவர்களின் இச்செயல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment