Monday, 11 February 2013

பசிலிக்கா

பசிலிக்கா
 பசிலிக்கா என்றால் கிரேக்கத்தில் அரசரின் நீதிமன்றம் என்று அர்த்தம். பண்டைய உரோமைய அங்காடியிலிருந்த பொதுக்கட்டிடம், பசிலிக்கா என அழைக்கப்பட்டது. பழங்கால உரோமையரின் பசிலிக்கா, பண்டமாற்று வணிகத்துக்கும், சட்டம் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்படவும் பயன்படுத்தப்பட்டது. மத்திய காலத்தில் வட ஐரோப்பாவில், நகரங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு வசதியாக பொதுவான இடங்களில் பசிலிக்காக்களை அமைத்தனர். இவ்வாறு அமைக்கப்பட்ட பசிலிக்காக்கள், சந்தைகளாகவும் பயன்படுத்தப்பட்டன. எனினும் இந்தப் பசிலிக்காக்களின் வடிவமைப்புகள் இடத்துக்கு இடம் வேறுபட்டிருந்தன. பசிலிக்காக்கள் பொதுவாக, வில்வடிவில் மேற்கூரையையும், நடுக்கூடத்தில் சமஇடைவெளிகளில் தூண்களையும் கொண்டிருந்தன. நடுகூடம் தொடங்கும் ஒருபகுதியில் நீதிபதிகள் அமர்வதற்கு ஏற்றாற்போல் சற்று உயரமான மேடை அமைக்கப்பட்டது. கி.மு.184ல் உரோமையில் கட்டப்பட்ட Porcia பசிலிக்கா, மிகப்பழமையான உரோமன் பசிலிக்காவாகும். உரோமையில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய பின்னர், இதே பசிலிக்கா வடிவில் அமைக்கப்பட்ட கிறிஸ்தவக் கட்டிடமும் பசிலிக்கா என அழைக்கப்படலாயிற்று. செவ்வக வடிவில் பசிலிக்காக்கள் இருந்தாலும், மத்தியில் நடுக்கூடத்தையும், இரு பக்கங்களிலும் பிரகாரங்களைக் கொண்ட கட்டிட அமைப்பே கிறிஸ்தவத்தில் பசிலிக்கா என அழைக்கப்பட்டது. காலப்போக்கில், திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட, பெரிய மற்றும் முக்கியமான ஆலயம், பசிலிக்கா என அழைக்கப்பட்டது. தற்போது திருஅவையில் வத்திக்கான் புனித பேதுரு, உரோம் புனித ஜான் இலாத்தரன், புனித பவுல், புனித மேரி ஆகிய நான்கு பெரிய (மேஜர்) பசிலிக்காக்கள் உள்ளன. உரோம் புனித இலாரன்ஸ் பசிலிக்காவும் பெரிய பசிலிக்கா எனக் கருதப்படுகிறது. மேலும், உலகில் 1,400க்கு மேற்பட்ட சிறிய(மைனர்) பசிலிக்காக்கள் உள்ளன. இவற்றில் 527 இத்தாலியில் உள்ளன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...