ஐ.நா மனிதஉரிமைகள்பேரவையில் சிறிலங்கா விவாகாரத்திலும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் : அயர்லாந்து அமைச்சர்
மனிதஉரிமைகள் விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் திடசங்கல்பம் பூண்டுள்ளதென்றும், தற்போது அவ்விடயத்தில் அதிகசெயற்பாடுகளுக்கு முன்னுரிமையினை ஒன்றியம் கொண்டுள்ளதனால் ஐ.நா மனித உரிமைச் சபையினையும் கருத்தில் எடுக்கப்பட வேண்டியதாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களுக்கு சிரியா பொறுப்புக் கூறவேண்டும்என்றும், அதிகரித்து செல்லும் அந்தநாட்டு அவலங்கள் பேரவையின் நிகழ்சிநிரல் திட்டத்தில் உச்சநிலையில் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ள அவர்கள் சிறிலங்கா , பெலரஸ், மாலி, பாறெயின், கொங்கோ, எத்திரியா, சூடான், வடஆபிரிக்கா, ரூசியா, மத்திய ஆசிய நாடுகள் சிலவற்றின் மனிதஉரிமைமீறல்கள்கூர்மையாக கவனிக்கப்படவேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமை கோரிக்கை என்று , Lucinda Creighton கூறியிருக்கிறார்.
ஐக்கியா நாடுகள் மனித உரிமை சபையில் ஐரோப்பிய ஒன்றியத்தால்முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து இடம்பெற்றிருந்த ஒன்றிய நாடுகளில் கூடத்திலேயே, அயர்லாந்து அரசாங்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான அமைச்சர் , Lucinda Creightonஅவர்கள் இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment