Monday, 18 February 2013

கழிவறையை விட சமையலையில்தான் அதிக பக்றீரியா:ஆய்வில் தகவல்

கழிவறையை விட சமையலையில்தான் அதிக பக்றீரியா:ஆய்வில் தகவல்

நம் வீட்டில் உள்ள கழிவறைகளை விட சமையலறைகளில்தான் அதிக அளவில் கிருமிகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் உண்ணும் உணவிற்கு மட்டுமல்லாது, அவை சமைக்கப்படும் சமையலறைக்கும் பங்குண்டு. இதனை வலியுறுத்தும் வகையில் இந்திய மருத்துவ அகாடமி சுகாதாரமான சமையலறை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 6 நகரங்கள் இந்த கருத்துக் கணிப்பில் இடம் பெற்றன. சுகாதாரமான சமைலறையை வைத்திருப்பதில் சென்னை பின்தங்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. 1400 இல்லத்தரசிகள் இந்த கருத்துக்கணிப்பில் 1400 இல்லத்தரசிகள், 500 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டன.
பார்வைக்கு சுத்தம் போதும் அதில் சமையலறையை துடைத்தாலே போதும் என 87 விழுக்காட்டினரும், பார்வைக்கு சுத்தமாக இருந்தால் போதும் என்று 95 விழுக்காட்டினரும் நினைப்பதாக தெரியவந்துள்ளது.
கிருமிகளை கொல்லவேண்டும் மேலும், வெறும் 13 விழுக்காட்டினர் மட்டுமே கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் நீ்க்குவதே சுகாதாரம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கழிவறையை விட சமையலறை மிகவும் சுகாதாரமற்ற நிலைக்கு மாறி வருவதாக அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஃப்ரிட்ஜை கொஞ்சம் கவனிங்க அதே போல் குளிர் சாதனப் பெட்டிகளில், காற்று கூட புகாத அளவிற்கு பொருட்களை அடுக்கி வைப்பதைத் தடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இவ்வாறு அடுக்கி வைப்பதால், வெப்பநிலையை சீராக பராமரிக்க முடியாமல் நோய்க்கிருமிகள் வளர ஏதுவாகி விடும் என்றும் கூறுகின்றனர்.
கிச்சன் சிங்க் சுத்த மோசம் கழிவறைகளில் சீட்டில் இருக்கும் பாக்டீரியாக்களை விட வீட்டின் சமையலறை கிச்சன் சிங்க்கில்தான் அதிக அளவில் பாக்டீரியா கிருமிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி? குறிப்பாக சென்னையில் மட்டும் 34 விழுக்காட்டினர் படுக்கை அறையையும், 32 விழுக்காட்டினர் வரவேற்பறையை மட்டுமே சுத்தமாக வைக்க நினைப்பதாகவும், அதுவும் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே என்கிறது மருத்துவ அகாடமியின் புள்ளி விபரம்.



No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...