Tuesday, 19 February 2013

இலங்கை அரசு தப்பிக்க முடியாது: சேனல் 4 இயக்குநர் பேட்டி

இலங்கை அரசு தப்பிக்க முடியாது: சேனல் 4 இயக்குநர் பேட்டி

 
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மணல் மூடைகளுக்கு நடுவே, சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திக் கொண்டு காயங்களுடன் பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. 2 வது படத்தில், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கேமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் போலியானது என்று இலங்கைத்தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் அமைதியை குலைக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இலங்கை கொலைக்களங்கள் பற்றி சேனல்-4 ஆவணப்பட இயக்குநர் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது பாலச்சந்திரன் படம் ஜோடிக்கப்பட்டது என்ற இலங்கை அரசின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தார். மேலும் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்வதில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது எனவும் போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் மகன் கொலை மட்டும் அல்ல, பாலியல் வன்கொடுமை, சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்றதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...