Sunday 17 February 2013

தஞ்சை பெரிய (பிரகதீஸ்வரர்) கோவில்

தஞ்சை பெரிய (பிரகதீஸ்வரர்) கோவில்

தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய (பெருவுடையார்) கோவில் உலகப் புகழ் பெற்ற வியப்பான கட்டிட வேலைப்பாடு கொண்ட இந்து ஆலயம். இது சோழ பேரரசன் இராஜராஜ சோழன் தஞ்சாவூரை ஆட்சிசெய்த கி.பி. 10ம்-11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் மூலமாக அறிகின்றோம். இந்த ஆலயக் கட்டிட வேலைகள் 1003 ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளில் முடிவுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது கருவறையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. கோபுரத்தின் நிழல் எக்காலத்திலும் நிலத்தில் விழாதபடி கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும்வண்ணம் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவிலின் முன் அமர்ந்த கோலத்தில் உள்ள தனிக் கல்லில் செதுக்கிய நந்தி 25 டன் எடை, 12 அடி உயரம்,  8 அடி அகலம், 20 அடி நீளமும் உடையது. கோபுரத்தின் உச்சியில் (விமானத்தில்) உள்ள எண்கோண் கலசம் 3.8 மீட்டர் உயரமும் 81 டன் எடையும் உடைய தனியான 25 அடி சதுரக் கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த ஆலயம் (பிரகதீஸ்வரர்) UNESCO வினால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஆதாரம் அருவம் இணையதளம்)

No comments:

Post a Comment