Tuesday 19 February 2013

நயாகரா பேரருவி

நயாகரா பேரருவி

நயாகரா அருவி, வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்த அருவியைக் காண, ஆண்டுதோறும் குறைந்தது ஒரு கோடி மக்கள் வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. கனடாவையும் அமெரிக்க ஐக்கிய நாட்டையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ளது இந்த அருவி. 56கி.மீ. நீளம் கொண்ட நயாகரா ஆறு, இரு பிரிவுகளாகப் பிரிந்து, இரு பெரும் அருவிகளாக வீழ்கிறது.
கனடா நாட்டின் பகுதியில் குதிரை இலாட (Horse Shoe) வடிவில்  விழும் அருவியில் 85 விழுக்காடு நீர் கொட்டுகிறது. மற்றொரு அருவியின் பெயர் அமெரிக்க அருவி. இவை இரண்டும் அல்லாமல், மணப்பெண் தலையில் அணியும் வெண்மையான வலைபோல விழும் மற்றொரு சிறு அருவியின் பெயர் Bridal Veil Falls. குதிரை இலாட அருவி 792மீ. அகலமும், 53மீ. உயரமும் கொண்டது. அமெரிக்க அருவி 305மீ. அகலமும், 55மீ. உயரமும் கொண்டது. 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்று கருதப்படும் நயாகராப் பேரருவியில், அறுபது இலட்சம் கன அடிக்கு அதிகமான நல்ல நீரானது ஒவ்வொரு நிமிடமும் கொட்டுகிறது.
இங்கு கொட்டும் நீரிலிருந்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில், மின்சக்தி உருவாக்கப்படுகிறது. Robert Moses மற்றும் Adam Beck என்ற இரு மின் நிலையங்கள் வழியாக 4.4 gigawatts, அதாவது, 44 இலட்சம் கிலோ வாட்ஸ் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

No comments:

Post a Comment