Sunday, 17 February 2013

உலகின் மிகப் பெரிய உயிரினம் - தேன் காளான்

உலகின் மிகப் பெரிய உயிரினம் - தேன் காளான்

அமெரிக்காவின் Oregon மாநிலத்தின் கிழக்குப்பகுதியில், நிலப்பரப்பிற்குக் கீழ் மூன்று அடி ஆழத்தில் காணப்படும் தேன் காளான் (Honey Mushroom), ஏறத்தாழ 2200 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து காணப்படுகிறது. இது 1000 கால்பந்து விளையாட்டுத்திடல்களின் பரப்பளவை உள்ளடக்கியதாகும். இந்த இராட்சதக் காளான் அர்மில்லாரியா அஸ்டோயே (Armillaria ostoyae) எனப்படும் பூஞ்சை வகையைச் சார்ந்தது. இதுவே உலகின் மிகப் பெரிய உயிரினம் என்று கருதப்படுகிறது.
இது மரங்களின் வேர்களில் உள்ள நீரையும் சத்துக்களையும் உறிஞ்சி உயிர் வாழக்கூடிய ஓர் ஒட்டுண்ணி வகை உயிரினம். Oregon மாநிலத்தில் Blue Mountains பகுதியில் இருந்த காடுகளில் மரங்கள் அழிந்ததைக் கண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது, இந்த தேன் காளான் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 2400 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவருவதாகக் கணிக்கப்பட்டுள்ள இந்தக் காளான், 7200 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியது என்று சொல்லப்படுகிறது.
எடையளவில் 650 டன் இருக்கும் இந்தக் காளான், ஒரே ஒற்றை உயிரினமாகக் கருதப்பட்டால், உலகின் மிகப் பெரிய உயிரினம் இதுதான். 2000மாம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் காளான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குமுன்னதாக, அமெரிக்காவின் Washington மாநிலத்தில், 1500 ஏக்கர் பரப்பளவில் இருந்த இதேவகை இராட்சதக் காளானே மிகப் பெரியதெனக் கருதப்பட்டது.

 

No comments:

Post a Comment