Thursday 14 February 2013

இரத்தம்

இரத்தம்
இரத்த சிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என இரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் பிளாஸ்மாஎன்ற பொருளும் உள்ளது.
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின்என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள்தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 இலட்சம் இரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். இரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை.
இரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை இரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
உடலில் காயம் ஏற்பட்டவுடன் இரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி பிளேட்லட்அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி அடைப்பை ஏற்படுத்தி மேலும் இரத்தக் கசிவை இவை தடுத்துவிடும்.
திசுக்கள் உயிர்வாழ ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் இரத்தம் தான்.  இரத்தத்தில் ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு பிரிவுகள் உள்ளன.


No comments:

Post a Comment