அனைத்துலக மால்ட்டா பிறரன்பு அமைப்பு (The Knights of Malta)
மத்திய காலத்தில் திருஅவையில் உருவான பொதுநிலையினர் அமைப்புக்களில் இன்றும் விறுவிறுப்புடன் செயல்பட்டு வரும் சில அமைப்புக்களில் The Knights of Malta என்ற அனைத்துலக பிறரன்பு அமைப்பும் ஒன்றாகும். இந்த அமைப்பு, 1309ம் ஆண்டுவரை, எருசலேம் Hospitallers என அழைக்கப்பட்டது. இஸ்ரேலின் Amalfitan மருத்துவமனையோடு தொடர்புகொண்டிருந்த Hospitallers
என்ற ஒரு குழுவே இவ்வமைப்பை உருவாக்கியது. முதல் சிலுவைப்போரின்போது
1099ம் ஆண்டில் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் எருசலேமைக் கைப்பற்றிய பிறகு, இந்த Hospitallers அமைப்பு தனக்கென ஒரு சட்ட அமைப்பைக்கொண்டு, சமய மற்றும் இராணுவ அமைப்பாக மாறியது. 1113ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியன்று திருத்தந்தை 2ம் பாஸ்கால், இந்த மால்ட்டா அமைப்பின் ஆன்மீக மற்றும் இறையாண்மையின் தனித்துவத்தை ஏற்று அதற்குத் திருப்பீடத்தின் அங்கீகாரம் அளித்தார். மேலும், புனித பூமியை இசுலாமியப் படைகள் கைப்பற்றிய பின்னர், இந்த Hospitallers அமைப்பு, 1522ம் ஆண்டுவரை Rhodesலிருந்தும், பின்னர் மால்ட்டாவிலிருந்தும் செயல்பட்டது. எனவே 1522ம் ஆண்டுவரை Knights of Rhodes என அழைக்கப்பட்ட இந்த அமைப்பு, 1530ம் ஆண்டிலிருந்து Knights of Malta என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1834ம் ஆண்டில் இறையாண்மை கொண்ட ஓர் அமைப்பாக(SMOM) உரோம் நகரில் தனது தலைமையகத்தைக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இவ்வாண்டில் தனது 900மாம் ஆண்டைக் கொண்டாடும் The Knights of Malta அமைப்பு, 13,500 உறுப்பினர்கள், 80,000 தன்னார்வப் பணியாளர்கள் மற்றும் 25,000க்கு மேற்பட்ட நலப்பணியாளர்களின் ஆதரவுடன் 120 நாடுகளில் மருத்துவ, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றது.
No comments:
Post a Comment