Tuesday, 29 March 2022

உயிர்ப்புப் பெருவிழாவன்று தேர்வுகள் தவிர்க்கப்படவேண்டும்

 

உயிர்ப்புப் பெருவிழாவன்று தேர்வுகள் தவிர்க்கப்படவேண்டும்


இந்து மதத்தினருக்கு கடவுள் இராமர் பிறந்த நாள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா மிக முக்கியம்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று தேர்வுகள் வைப்பது தவிர்க்கப்படுமாறு இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் அரசிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கரில், வருவாய்த் துறையின் பணிகளுக்கு ஆள்களைத் தெரிவுசெய்யும் தேர்வு, இந்துமதக் கடவுள் இராமர் பிறந்த நாளன்று வந்ததால், அத்தேர்வு நாள், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவான வருகிற ஏப்ரல் 17ம் தேதியன்று நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து யூக்கா செய்தியிடம் உரைத்த, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் நலனுக்காக உழைக்கின்ற, அகில பாரதிய இசை சமுதாய ஆதிக்கார் சங்கத்தின் தலைவர் Guruvinder Singh Chadda அவர்கள், இத்தேர்வு, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்துவது மிகுந்த கவலையளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்துமதத்தினருக்கு கடவுள் இராமர் பிறந்த நாள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா மிக முக்கியம் என்றும் Chadda அவர்கள் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சத்தீஸ்கர் மாநிலத்தின் மூன்று கோடி மக்கள் தொகையில், ஏறத்தாழ 93.25 விழுக்காட்டினர் இந்து மதத்தினர் மற்றும், 2 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள். கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம், ஜைனம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 2 விழுக்காட்டிற்கும் குறைவே. (UCAN) 


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...