Thursday, 17 March 2022

திருத்தந்தைக்கு, உக்ரைனின் கீவ் நகர மேயர் கடிதம்

 

திருத்தந்தைக்கு, உக்ரைனின் கீவ் நகர மேயர் கடிதம்



முற்றுகையிடப்பட்ட உக்ரேனியத் தலைநகர் கீவ் மக்களுடன் தனது நெருக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைனின் கீவ் நகர மேயரிடம் இருந்து கடிதம் ஒன்றைப் பெற்றுள்ளதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள்  தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தலைநகர் கீவ் நகர மேயரிடமிருந்து திருத்தந்தை கடிதம் ஒன்றை பெற்றுள்ளதாகவும், கட்டாயத்தின்பேரில் அந்நாட்டை விட்டு வெளியேறும் பாதிக்கப்பட்ட மக்களோடு தன் நெருக்கத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், மத்தேயோ புரூனி அவர்கள் தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கீவ் நகர மேயர் Vitali Klitschko அனுப்பியுள்ள கடிதம் பற்றி  மத்தேயோ புரூனி அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

கீவ் நகர் மக்களுக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருவதாகத் தெரிவித்த Matteo Bruni அவர்கள், நகரங்களைக் கல்லறைகளாக மாற்றுவதற்குமுன்னர், ஒன்றுமறியாத குழந்தைகள், அப்பாவி மக்கள், நிராயுதபாணியாக நிற்கும் குடிமக்கள் ஆகியோரைக் கொல்லும் மாபாதகச் செயல்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கடும் ஆயுதத் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்,  என மார்ச் 13, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்பு திருத்தந்தை விண்ணப்பித்ததையும் எடுத்துரைத்தார்.

பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரஷ்ய படையின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இப்போது வரை, அதாவது, 20 நாள்களை நெருங்கும் நிலையில், 2.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா-வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு (UNHCR) தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...