திருத்தந்தை, கனடாவின் பூர்வீக இனத்தவர் பிரதிநிதிகள் சந்திப்பு
கனடா நாட்டுப் பூர்வீக இனத்தவரின், Métis” தேசிய அவை “மற்றும், “Inuit” அமைப்பின் உறுப்பினர்கள், திருத்தந்தையை, இத்திங்களன்று திருப்பீடத்தில் ஏறத்தாழ ஒரு மணிநேரம் சந்தித்து உரையாடினர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
இவ்வுலகில், குறிப்பாக உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ, அமைதியின் அரசியாம் அன்னை மரியாவிடம் அனைவரும் சேர்ந்து மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 28 இத்திங்களன்று கேட்டுக்கொண்டார்.
ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் (#PrayTogether) என்ற ஹாஷ்டாக்குடன் இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மனித சமுதாயத்தை, குறிப்பாக, இரஷ்யாவையும், உக்ரைனையும் நாம் அர்ப்பணித்த அமைதியின் அரசியிடம் மனந்தளராமல் மன்றாடுவோம், இந்த அர்ப்பணிப்பு திருவழிபாட்டில், பெருமளவில், உள்ளார்ந்த அளவில் பங்கேற்ற உங்கள் எல்லாருக்கும் நன்றி” என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார்.
கனடா நாட்டு பூர்வீக இனத்தவரின் அமைப்புகள்
மேலும், கனடா நாட்டுப் பூர்வீக இனத்தவரின், Métis” தேசிய அவையின் பத்து பிரதிநிதிகள் “மற்றும், “Inuit” அமைப்பின் எட்டு உறுப்பினர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 28, இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் ஏறத்தாழ ஒரு மணிநேரம் சந்தித்து உரையாடினர். பூர்வீக இனத்தவர் எதிர்கொண்ட துயரங்கள் மற்றும், அவர்களின் தேவைகளுக்கு திருத்தந்தை செவிமடுத்தார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
திருத்தந்தை, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்
இன்னும், இத்திங்கள் காலையில், கேரளாவின் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவரும், அவ்வழிபாட்டுமுறையின் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கள் அவர்களும், போலந்து ஆயர் பேரவையின் தலைவரான, போஸ்னன் பேராயர் Stanisław Gądecki அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினர்.
No comments:
Post a Comment