Tuesday, 28 October 2014

தன் இரு மகள்களுக்கும் அசிட்டைப் பருக்கி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்! லண்டனில் பரபரப்புச் சம்பவம்

தன் இரு மகள்களுக்கும் அசிட்டைப் பருக்கி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்! லண்டனில் பரபரப்புச் சம்பவம்

Source: Tamil CNN. லண்டனின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் ஹீனா சொலாங்கி (Heena Solanki) என்ற இந்திய பெண் தன் இரு பெண் குழந்தைகளுக்கும் அசிட்டை பருக்கியதுடன், தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 34 வயதான இவர், உயிர்வேதியியலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது ஒன்பது வயதான மகள் ஜேஸ்மின் மற்றும் நான்கு வயதான மகள் பரிஷா ஆகியோர் கணவர் சொலாங்கி மற்றும் அவரது தாய் தந்தையினருடன் வசித்து வந்தனர்.
இவரது மரணத்திற்கு காரணம் இவரது மாமனார் மற்றும் மாமியார் என்று அவர் கையால் எழுதிய குறிப்பு ஒன்றிலிலிருந்து தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சொலாங்கி கூறுகையில், தனது மனைவி தன்னுடன் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்ததாகவும், எந்த நிலையிலும் அவர் தனது தாய் தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிவித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
இவரது நண்பர் ஒருவர் கூறுகையில், தன்னிடம், வீட்டில் தம் மாமியார் மற்றும் மாமனாருடன் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கூறி அழுத சம்பவத்தை நேரில் பார்வையிட்ட மீட்புப் ப்டையினர், அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய மருந்து பொருட்கள் அனைத்தும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்பதையும், அவரது சடலத்தின் அருகே தன் இறப்பிற்கான காரணத்தை குறித்த அவர் கையாலேயே எழுதிய ஒரு குறிப்பையும் கண்டறிந்துள்ளனர்.
முதலில் தன் இரு மகள்களையும் அசிட் அருந்த செய்து பின்னர் தானும் விஷம் அருந்தி இறந்துள்ளார் ஹீனா. இச்சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
_78509708_ins_solanki_family_ruislip_9
_78509710_ins_solanki_family_ruislip_7(2)
1414165250890_wps_63_National_News_and_Picture

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...