Tuesday, 28 October 2014

வீடு திரும்பினால் கொன்றுவிடுவோம் வெளிநாட்டு ஜிகாதிகளுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை

வீடு திரும்பினால் கொன்றுவிடுவோம் வெளிநாட்டு ஜிகாதிகளுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை

Isis-threatens-to-kill-British-jihadis-wanting-to-come-home_SECVPFSource: Tamil CNN. வீடு திரும்ப விரும்பினால் கொன்றுவிடுவோம் என்று சிரியா, ஈராக்கில் போரிடும் பிரிட்டன் ஜிகாதிகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. சிரியா, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்த பகுதிகளை ஒன்றிணைத்து ’இஸ்லாமிய நாடு’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அல்-கொய்தாவில் இருந்து உருவானது. இந்த தீவிரவாதிகளின் தலைவராக அபுபக்கர் அல்-பக்தாதி இருந்து வருகிறான். இவரை தாங்கள் உருவாக்கிய இஸ்லாமிய நாட்டின் தலைவராக அதாவது ’காலிபாத்’ ஆக நியமித்துள்ளனன். ஏற்கனவே இவன் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி ஆக அறிவிக்கப்பட்டவன். அல்-கொய்தா இவ்வியக்கத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அழைப்பை ஏற்று உலக நாடுகளில் இருந்து ஜிகாதிகள் மறைமுகமாக சிரியா மற்றும் ஈராக்கிற்கு சென்றனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து உலகப்படைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். உலக நாடுகளின் முழு கவனமும் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதல் மீது திரும்பியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்காவும், அதன் அரபு கூட்டாளிகள், மற்றும் பிற உலக நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் தீவிரவாதிகள் பலர் பலியாயினர்.
இந்நிலையில் “ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரிட்டு வரும் பிரிட்டன் ஜிகாதிகள் சொந்த நாடு திரும்ப விரும்பினால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.” என சிரியா தீவிரவாத குழுக்களின் மத்தியிலான விரிவான தொடர்பை மேற்கோள்காட்டி கார்டியன் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டனின், போர்ட்ஸ்மவுத்தை சேர்ந்த ஜிகாதி, முகமது மெஹ்தி ஹாசன் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவிற்கு தீவிரவாத இயக்கத்திற்கு சென்ற போரிட்ட 6 பேர் கொண்ட கும்பலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் எல்லை நகரான கோபானியை கைப்பற்ற கடந்த வெள்ளியன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 19 வயதான வாலிபர் முகமது மெஹ்தி ஹாசன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த வாலிபர்கள் 6 பேர், பிரிதானி பிரிகேட் வங்கதேச பேட் பாய்ஸ் என்று அழைத்துக் கொண்டு சிரியா சென்றுள்ளனர். தற்போது பிரிட்டம் திரும்ப விரும்பும் ஜிகாதிகள் மரணத்தை எதிர்க்கொண்டு உள்ளனர்.
குவாண்டானமோ விரிகுடா தடுப்பு சிறையின் முன்னாள் கைதி மொசாம் பெக் இதனை உறுதி செய்துள்ளார்.
சிரியாவில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரிட்டுவந்த பிரிட்டன் ஜிகாதிகள் 12 பேர் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பியதாகவும், அவர்கள், வீடு திரும்ப விரும்புபவர்களுக்கு எதிராக தீவிரவாத அமைப்பின் நடவடிக்கையை அடுத்து அங்கே இருந்துவிட்டனர் என்றும் மொசாம் பெக் தெரிவித்துள்ளார். சுமார் 30க்கும் மேற்பட்ட ஜிகாதிகள் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணை அல்-பக்தாதி அழைப்பு விடுத்ததையடுத்து பிரிட்டனில் இருந்து மட்டுமே சுமார் 500 பேர் சிரியா மற்றும் ஈராக்கிற்கு சென்றுள்ளனர். இதில் 24 பேர் போர்க்களத்தில் மரணம் அடைந்துவிட்டனர். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment