Tuesday, 28 October 2014

இவ்வாரத்துடன் நிறைவடையும் போர்க்குற்ற விசாரணை சாட்சியம் கையளிப்பு காலம்

இவ்வாரத்துடன் நிறைவடையும் போர்க்குற்ற விசாரணை சாட்சியம் கையளிப்பு காலம்

UN-LogoSource: Tamil CNN. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்தன என்று கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சாட்சியங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி முதல், 2011 நவம்பர் 15 ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெற்ற மிகவும் மோசமான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய கொடூரங்கள் தொடர்பில் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்காக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜெனீவா நேரப்படி நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது.
இதற்கமைய இறுதி விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னதாக கிடைக்கப்பெற்ற சாட்சியங்களை விரிவாக அலசி ஆராய்வதற்கான கால அவகாசம் விசாரணைக் குழுவிற்கு கிடைக்கும் என்று ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் அடுத்த ஆண்டு மார்ச் மாதக் கூட்டத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த இறுதி அறிக்கை பூர்திசெய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment