மனிதக் குடலில் உள்ள பக்டீரியாக்களில் இருந்து வாகன எரிபொருள்! பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அதிரடி
Source: Tamil CNN. இங்கிலாந்து மற்றும் பின்லாந்து நாடுகளின் விஞ்ஞானிகள் அண்மையில் மனித
குடல் பகுதியில் பரவலாக காணப்படும் இ.கோலி என்னும் பக்டீரியாக்களைக்
கொண்டு வாகன எரிபொருளை தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.
இந்த எரிபொருள் தற்போது பூமியில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல், டீசல்
போன்றவற்றுக்கு எதிர்காலத்தில் மாற்று எரிபொருளாகவும் அமையும் என்று
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் அறிவியல் துறை விஞ்ஞானி பாட்ரிக் ஜோன்ஸ்
நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘தற்போது இ.கோலி பாக்டீரியாக்கள்
மூலம் ஒரு வாகனத்தின் என்ஜினை கிளப்பக் கூடிய அளவிற்கான எரிபொருளைத்தான்
நாங்கள் தயாரித்து இருக்கிறோம். எனினும் எங்களது இந்த முயற்சி வர்த்தக
ரீதியாக எரிபொருள் தயாரிப்பதற்கான முதல் படியாக அமைந்து இருக்கிறது’’ என்று
அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment