Saturday, 7 June 2014

பிரிட்டன் அரசின் இந்த ஆண்டிற்கான திட்டங்கள் :ராணி எலிசபெத் வெளியிட்ட முக்கிய அம்சங்கள்

பிரிட்டன் அரசின் இந்த ஆண்டிற்கான திட்டங்கள் :ராணி எலிசபெத் வெளியிட்ட முக்கிய அம்சங்கள்

பிரிட்டன் அரசின் இந்த ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். ராணி எலிசபெத், அவரின் அதிகாரப்பூர்வ இல்லமான, பங்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து, குதிரைகள் பூட்டிய ரதத்தில் வந்தபோது சபாநாயகர், பிரதமர் மற்றும் எம்.பி.,க்கள் அவரை வரவேற்றுள்ளனர்.
இதனையடுத்து, லண்டன் மாநகரில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில், தனது 10 நிமிட உரையில், கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அடங்கிய உரையை எலிசபெத் வெளியிட்டுள்ளார்.
எலிசபெத் ராணியின் அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்:-
அரசின் செலவுகள் குறைப்பு.
புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்.
பாலிதீன் பை பயன்படுத்தினால் அபராதம்.
உறுதிமொழிகளை நிறைவேற்றாத, மக்கள் பிரதிநிதிகளை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம்.
மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை.
ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பு.

No comments:

Post a Comment