Saturday, 7 June 2014

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்க 1 வாரமே இருக்கும் நிலையில் தயாராகாத மைதானம் : பிபா அதிர்ச்சி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்க 1 வாரமே இருக்கும் நிலையில் தயாராகாத மைதானம் : பிபா அதிர்ச்சி

பிரேசில் நாட்டில் வரும் 12ஆம் திகதி முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த நாட்டில் இன்னும் ஒரு கால்பந்து மைதானம் தயாராகாத நிலையில் இருப்பதால், உலக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் ‘பிபா’ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை நடக்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. பிரேசில் நாட்டின் அனைத்து மைதானங்களும் போட்டியை நடத்துவதற்கு தயாராகவுள்ள நிலையில் Curitiba என்ற இடத்தில் உள்ள மைதானம் இன்னும் கட்டுமானப்பணிகளை நிறைவு செய்யாமல் இருப்பதை அறிந்து பிபா’ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மைதானத்தில் வரும் 16ஆம் திகதி நைஜீரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாக மைதானத்தை கட்டிவரும் நிறுவனம் சமாதானம் கூறினாலும், ‘பிபா’ அதிகாரிகள் அதை ஏற்கும் நிலையில் இல்லை. இன்னும் நான்கு நாட்களுக்குள் மைதானம் முழுவதுமாக தயாராகவில்லை எனில், இங்கு நடைபெற இருக்கும் போட்டிகள் அனைத்தும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment