ஸ்பெயினின் ராணியாகிறார் முன்னாள் பத்திரிக்கையாளரான லெடிஷியா
கடந்த 69 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டை முதலாம் ஜூவான் கார்லோஸ் ஆண்டு வருகிறார். இவர் மனைவி சோபியா 1975 முதல் மகாராணியாக உள்ளார். இளைய தலைமுறையிடம்
ஆட்சிப் பொறுப்பை கையளிக்கும் வகையில் அரசர் பதவியில் இருந்து விலகி தன் மகனும், இளவரசருமான பிலிப்பிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க கார்லோஸ் முடிவு செய்துள்ளார். எதிர்வரும் 18 இல் பிலிப் அரசராக முடிசூட்டப்படவுள்ளார். பிலிப்பின் மனைவி லெடிஷியா
பிரபல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.கடந்த 2002 இல் இருவரும் சந்தித்தனர், 2004 இல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment