326,000 தேனீக்களை உடலில் சுமந்து உலக சாதனை புரிந்து சீன நபர்
Source: Tamil CNN. சீனாவில் உள்ள ஒருவர் தன்னுடைய உடல் முழுவதும் சுமார் 326,000 தேனிக்களை மொய்க்க வைத்து உலக சாதனை புரிந்துள்ளார்.சீனாவின் Shandong Province என்ற பகுதியை சேர்ந்த 54 வயது Gao Bingguo என்பவர் தனது உடல் முழுவதும் 326,000 தேனீக்களை மொய்க்க வைத்துள்ளார். அவரது உடல் முழுவதும் தேனீக்களாம் மூடப்பட்டது. அந்த தேனீக்களின் மொத்த எடை சுமர் 33 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
Gao Bingguo அவர்கள் இந்த சாதனையை செய்யும் முன் தனது உடல் முழுவதும் pungent என்ற திரவத்தை தனது உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார். அதன்பின்னர் அவர் தேனீக்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு பெட்டியில் சேகரித்து வைத்திருந்த சுமார் 326,000 தேனீக்களை திறந்துவிட்ட பின்னர் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அவரது உடல் முழுவதும் பரவிக்கொண்டது. ஒரு கட்டத்தில் அவர் மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு அவரது முகத்தையே தேனீக்கள் மறைத்துக்கொண்டது.
இந்த சாதனையை Gao Bingguo கின்னஸ் சாதனையாளர்கள் முன் செய்து காட்டி, உலகில் அதிக தேனிக்களுடன் வாழ்ந்தவர் என்ற பெருமையை பெற்றார்.
No comments:
Post a Comment