Wednesday, 6 February 2013

மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

மல்லிகையின் மணம், ஆளை அசத்துக்கூடியது. அதுவும் மதுரை சுற்றியுள்ள மாவட்டங்களில் விளையும் ‘மதுரை மல்லி‘க்கு தனி மணம் உண்டு. தற்போது மதுரை மல்லிகைப் பூவிற்கு மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் ''புவிசார் குறியீடு'' அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ''புவிசார் குறியீடு'' தமிழகத்தில் மலருக்கு என முதல் முறையாக மதுரை மல்லிக்கு தற்போது கிடைத்திருக்கிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மட்டுமே, 'மதுரை மல்லி' பெயரை பயன்படுத்த முடியும். மற்ற பகுதியில் விளைந்தவற்றை மதுரை மல்லி என்று விற்பதோ அல்லது பிற பூக்களை இதனு டன் கலப்படம் செய்வதோ தண்டனைக்குரிய குற்ற மாகும். இதற்கு 2 லட்சம் அபராதத்துடன், 5 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு.

மதுரை மல்லிக்கு இந்த சிறப்பு கிடைக்க, ராமநாதபுரம்தான் காரணம் என்றால் ஆச்சயர்மாகதான் இருக்கிறது. ஆம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சி மடம் பகுதியில் பதியன் (செடி)களைப் பெற்று வந்து வந்துதான் இந்த 5 மாவட்டங்களில் சாகுபடி செய்கிறார்கள். ஆனால், இந்த பதியன்களை ராமநாதபுரத்தில் செடியாக வளர்த்தாலும், மதுரை மாவட்ட மண்ணில் விளைவதை போல வாசம் வீசுவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...