புற்றுநோய்
உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானது புற்றுநோய். எல்லா வயதினரையும் தாக்கும் இந்நோயில், நுரையீரல், மார்பகம், தோல், வயிறு, நாக்கு, தொண்டை,
கல்லீரல் என 200க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. ஒரு இரத்தப் பரிசோதனையில் 13
வகையான புற்றுநோய்களைக் கண்டுபிடிக்க முடியும். மனித உடலானது பல வகையான
திசுக்களாலானது. இந்தத் திசுக்கள் வளர்ந்து, பிரிந்து, உடலை நலமாக வைத்துக்கொள்ளத் தேவையான அளவுக்கு, பல திசுக்களை உருவாக்குகின்றன. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய திசுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த திசுக்கள், இறக்கவேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள் அனைத்தும் கூட்டாக இணைந்து உடலில் கழலைகள் போன்ற ஒன்றை உருவாக்குகின்றன. இவை, தீங்கற்ற கழலைகள், தீங்கு விளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும். தீங்குள்ள கழலைகள் புற்றுநோய் ஆகும். இந்தியாவில், ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 இலட்சம் பேர் புற்றுநோயால் தாக்கப்படுகின்றனர். மேலும், ஆண்டுக்கு 5 இலட்சம் பேர் வீதம் இந்நோயால் இறக்கின்றனர். 2015ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 7 இலட்சமாக உயரும், எனினும், சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மூன்றில் இரண்டு புற்றுநோய் இறப்புக்களைத் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 4, அனைத்துலக புற்றுநோய் தினம்.
No comments:
Post a Comment