Monday, 4 February 2013

தேனிலவு தோன்றியது எப்படி?

தேனிலவு  தோன்றியது எப்படி?
 புதிதாகத் திருமணம் முடித்த தம்பதியர் 'தேனிலவு' கொண்டாடும் வழக்கம் 4000 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனிய கலாச்சாரத்தில் ஆரம்பமானதென்று கருதப்படுகிறது.
அக்கலாச்சாரத்தின்படி, திருமணம் முடித்த மாப்பிள்ளை, பெண் வீட்டில் ஒரு நிலவு மாதம் தங்கி விருந்துண்பது வழக்கம். இரு பௌர்ணமி அல்லது இரு அமாவாசைகளுக்கு இடைப்பட்ட காலமே ஒரு நிலவு மாதம் (Lunar month) எனப்படும். இந்த நிலவு மாதம் முழுவதும், பெண்ணின் தந்தை மாப்பிள்ளைக்கு, தேன் கலந்த பலவகைப் பானங்களை ஒவ்வொரு நாளும் தயாரித்து வழங்கவேண்டும். இந்த வழக்கத்தின் அடிப்படையில், இந்த மாதத்தைத் 'தேன் மாதம்' என்று பாபிலோனியர்கள் அழைத்தனர். தேன் மாதம், நிலவு மாதம் இரண்டும் கலந்து, 'தேனிலவு' என்ற சொல்லுக்கு வழி வகுத்தது.
1546ம் ஆண்டிலிருந்து 'தேனிலவு' என்ற வார்த்தையின் பயன்பாடு உருவானது. 19ம் நூற்றாண்டின் மத்தியில், போக்குவரத்து வசதிகள் பெருகிய பின்னரே, 'தேனிலவு'க்காக புதுமணத் தம்பதியர் வேற்றூருக்குச் செல்லும் பழக்கம்  ஆரம்பமானது.
 

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...