Friday, 1 February 2013

சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லை

சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லையென தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் பயின்ற மாணவன் நிரூபித்துள்ளார்.
இரு கண்களும் பார்வை இழந்த சொர்ணலிங்கம் தர்மதன் உயர்தர கலைப்பிரிவில் தமிழ், இந்துநாகரீகம், அரசியல் ஆகிய மூன்று பாடங்களிலும் சிறப்பு சித்தியான 3A எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும் தேசிய ரீதியில் ஐம்பத்துநான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.

தனது இரு கண்களில் பார்வையை இழந்த நிலையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம்.

எனது 9 வயதில் இரு கண் பார்வையையும் முற்றாக இழந்து விட்டேன். ஆனால் நம்பிக்கையை நான் இழக்கவில்லை. வாழ்வகத்தின் உதவியுடன் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கண் பார்வையுள்ள சாதாரண மாணவர்களுடனேயே கற்றேன்.

எனது விடாமுயற்சிக்கு ஆசிரியர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன் என சொர்ணலிங்கம் தர்மதன் தெரிவித்துள்ளார்.

இவர் காங்கேசன் துறை சந்தை வீதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கோண்டாவில் மேற்கில் வசித்து வருகின்றார். இவரின் தந்தையான சொர்ணலிங்கம் என்பவர் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விழிப்புலனற்ற மாணவன் மரதன் ஓடி சாதனை

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில், விழிப்புலனற்ற மாணவன் ஒருவர் 8 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இன்று காலை 6 மணிக்கு சுன்னாகம் மருதனார்மடத்தில் இருந்து தெல்லிப்பழை வரையான 8 கிலோ மீற்றர் தூரத்தை இவர் எந்தவித தடையும் இன்றி தனது கண்களை கறுப்பு துணியால் கட்டியவாறு ஓடி முடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தினால் தனது பார்வையை இழந்த இந்த மாணவன், சுன்னாகம் வாழ்வகத்தில் கல்விகற்று வருகிறார்.

இவர் அந்தப்போட்டியில் பெரும் விருப்போடு பங்குபெற்றி ஏனைய மாணவர்களுக்கு தான் சளைத்தவன் இல்லை என்ற வகையில் இவர் தனது சாதனை நிலைநாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...