கருமுட்டை சேகரிக்க பெண் ஊழியர்களுக்கு பணம் வழங்குகிறது ஆப்பிள், ஃபேஸ்புக் நிறுவனங்கள்
அவ்வாறு கருமுட்டைகளை பாதுகாத்து வைப்பதற்கு கருமுட்டை வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
இதற்கு மாற்றாக , பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை சேகரிப்பதற்கு ஆகும் செலவை ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதே போல, ஆப்பிள் நிறுவனமும், வரும் ஜனவரி மாதம் முதல் தனது பெண் ஊழியர்களுக்கு கருமுட்டை சேகரிப்பு உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இரண்டு நிறுவனங்களுமே, கருமுட்டை சேகரிப்புக்காக 20,000 டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,28,000) உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்த சலுகைகள் குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெண்களிடமிருந்து உழைப்பைப் பெறுவதற்காக, அவர்களது இயல்பான தாய்மைக் காலங்களை அவர்களிடமிருந்து பறிக்கும் வகையில் இந்தச் சலுகைகள் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment