புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் சில தனிநபர்கள் மீதான கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ள நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை என்று தீர்ப்பளித்துள்ளது.
கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அது பற்றி 2 மாதங்களுக்குள் யோசனைகளை வழங்கலாம் என்றும், கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டது 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளின் வழக்கு செலவை ஐரோப்பிய ஒன்றியம்செலுத்தவேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment