பேஸ்புக்கில் 100 மில்லியன் லைக் பெற்ற கிறிஸ்டினா ரொனால்டோ
ரசிகர்களும் தங்கள் அபிமான நட்சத்திரங்களை பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஆர்வத்துடன் பின் தொடர்கின்றனர். ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை ரசகர்கள் லைக் கொடுப்பது மூலம் நட்சத்திரங்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதுண்டு. அந்த வகையில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டினா ரொனால்டோ ஃபேஸ்புக்கில் 100 மில்லியன் லைக்குகளுக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். ஃபேஸ்புக் வரலாற்றிலேயே 100 மில்லியன் லைக் பெற்ற இரண்டாவது நபர் என்ற பெருமையும், முதல் விளையாட்டு வீரர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
100 மில்லியன் லைக்குகளை முதலில் பெற்ற பெருமை கொலம்பிய பாப் பாடகி ஷகிராவுக்கு உரியது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையின் போது அவர் இந்த சிகரத்தை எட்டிப்பிடித்தார். இப்போது போர்ச்சுகல் வீரரும் ரியல் மேட்ரிட் கால்பந்து குழுவுக்காக விளையாடுபவருமான கிறிஸ்டினா ரொனால்டோ 100 மில்லியன் லைக்குகளை தொட்டிருக்கிறார். 100 மில்லியன் நண்பர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
பாடகர்களான எமினம் ( 96 மில்லியன் லைக்) மற்றும் ரிஹானா ( 90 மில்லியன்) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். விளையாட்டு நட்சத்திரங்களை பொறுத்தவரை அர்ஜென்டினா வீரர் லீயோனெல் மெஸ்ஸி 74 மில்லியன் லைக்குகளுடன் 9 வது இடத்தில் உள்ளார்.
ரொனால்டோ 100 மில்லியன் லைக்குகளுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“100 மில்லியன் லைக் பெற்றதை பெருமையாக கருதுகிறேன், இந்த மைல்கல்லை தொட்டது மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தொடர்பு கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அவர் அதில் கூறியுள்ளார்.
ரொனோல்டோ ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் இரண்டிலுமே தீவிரமாக இருக்கிறார். அவரை சமூக ஊடக் சூப்பர் ஸ்டார் என்று அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ இதழ் வர்ணிக்கிறது. உலககோப்பையின்போது அவர் போர்ச்சுகல் அணியின் பயிற்சி மற்றும் தயாரிப்பு பற்றிய தகவல்களை ஃபேஸ்புக்கில் புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ரொனோல்டோ குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது மகனுடன் வெளியிட்ட புகைப்படம் 3.4 மில்லியன் லைக்குகளை அள்ளியது. ரொனோல்டோவுக்கு டிவிட்டரில் 305 மில்லியன் பாலோயர்கள் இருக்கின்றனர்.
ரோனோல்டோவின் பேஸ்புக் வீடியோ செய்தி: https://www.facebook.com/video.php?v=10152848335642164
No comments:
Post a Comment