அகதிகள் பிரகடனங்களுக்கு முரணாகச் செயற்படும் அவுஸ்திரேலியா! சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு
புகலிடக் கோரிக்கையாளர் படகுப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இதன் மூலம் சர்வதேச ரீதியான அழுத்தங்களை அபோட் அரசாங்கம் எதிர்நோக்கும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கை பரிசீலனை செய்யாது புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான விவகாரங்கள் அவுஸ்திரேலிய மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவுரு தீவுகளில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமின் நிலைமைகளை பார்வையிடுவதற்கு சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அனுமதி கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment