Sunday, 10 August 2014

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மறுத்த மன்னார் ஆயர்! இவர்களுக்கு எந்த ஆதரவும் வழங்க முடியாது எனவும் கைவிரிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மறுத்த மன்னார் ஆயர்! இவர்களுக்கு எந்த ஆதரவும் வழங்க முடியாது எனவும் கைவிரிப்பு

-மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டு சாட்சியம் அளிக்க மறுத்து விட்டதோடு அறிக்கை சமர்ப்பித்தார்.
இன்று(10) ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர் பிரதேசச் செயலக கட்டிடத்தில் 3 ஆம் நாள் அமர்வு இடம் பெற்ற போது காலை 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை மற்றும் அவருடன் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் ஆணைக்குழுவின் முன் சமூகமளித்தனர்.
அந்நேரம் ஆயர் 7 பக்கங்கள் கொண்ட மகஜர் ஒன்றை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து அதனை ஆணைக்குழு முன் வாசித்துக் காட்டினார்.
இதில் இரண்டு பங்கங்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கும் கருத்துக்களையும், ஏனைய பக்கங்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அவரால் வழங்கப்பட்ட 14 அம்சக் கோரிக்கைகளையும் அடங்கிய மகஜராகவே காணப்பட்டது.
இது குறித்து மன்னார் ஆயர் ஆணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்து விட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்,
காணாமல் போன மக்களைப் பற்றிய விசாரணை ஆணைக்குழுவிற்கு நான் வந்ததன் காரணம் இந்த ஆணைக்குழு எந்த விதமான மற்றைய ஆணைக்குழு எல்லாம் தமிழர்களுடைய விடயத்தில் தீர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஆணைக்குழுக்கள் எல்லாம் கண்டு கொண்டது எதுவுமே இல்லை.
-ஆகவே அப்படிப்பட்ட ஒரு நிலையிலே மற்றும் ஒன்றாக இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
ஆகவே இப்படிப்பட்ட ஆணைக்குழுக்கள் என்ற வரிசையிலே வருகின்ற இந்த முயற்சிகளுக்கு நான் எந்த வகையிலும் ஆதரவு வழங்க முடியாது.
ஆகவே நாங்கள் இதனை சமர்ப்பிக்க விரும்பவில்லை.அதற்கான காரணங்கள் பல.
இந்த நாட்டினுடைய முயற்சிகள் அநீதியான செயற்பாடுகளுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான இந்த நாட்டினுடைய முயற்சிகள், வழிமுறைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.
-எந்தவிதமான முயற்சிகளும் அவர்களுடைய கண்டுபிடிப்பினால் செயற்படுத்துகின்ற முறைகள் பூச்சியத்திலேயே உள்ளது.
-ஆகவே இப்படிப்பட்ட ஆணைக்குழுவிற்கு நாங்கள் வந்து எமது நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை. ஆனால் மக்கள் வருகின்றார்கள். அவர்கள் தங்கள் ஆதங்கத்தை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் ஆதங்கங்களை எங்கெங்கெல்லாம் சொல்ல முடியுமே அங்கே சென்று சொல்லுவார்கள்.
-இதனால் மக்களுக்கு தீர்வு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கு என்று சொல்ல முடியாது. இதனை சொல்லுவதினால் எமக்கு எவ்வித இழப்பும் கிடையாது. போய் சொல்லுவோம். சொல்லிப் பார்ப்போம் என்று வருகின்றார்கள். இதனால் அவர்களுக்கு எவ்வித மனப்பயமும் இருக்காது என்பது தெரியும்.
இப்படிப்பட்ட நிலையில் எங்களுக்கு எந்த விதமான நம்பிக்கையும் இந்த குழுக்களில் இல்லை. ஆகவே இந்தக்குழுக்களுக்கு முன் வந்து ஆதங்கங்களை சொல்லுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் எனது ஆதங்கத்தை எடுத்துச்சொல்லி விட்டு போவோம் என்றுதான் வந்தேன்.
எனது கவலைகளை இந்த ஆணைக்குழுவுக்கு முன்னால் எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. ஏன் என்றால் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஒரு ஊதாரணத்தை மட்டும் நான் சொல்ல விரும்புகின்றேன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கௌரவ ஜனாதிபதி அவர்கள் கொழும்பு அதிமேதகு கருதினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் ஊடாக செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். எனது ஆதங்கங்களை வரிசைப்படுத்தி தனக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்டிருந்தார். நான் குறித்த ஆதங்கங்களை கருதினால் ஊடாக தெரிவித்தேன்.
-அதன் பிற்பாடு ஜனாதிபதி அவர்கள் அவரது செயலாளர் லலீத் வீரத்துங்க மற்றும் வெளிநாட்டு விடயங்களுக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களையும் இடம் பெற்ற விசேட கூட்டம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
-அக்கூட்டம் கொழும்பு மறைமாவட்ட பேராயரின் இல்லத்தில் இடம் பெற்றது.குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு நான் கொடுத்த 14 விடயங்களில் எந்த விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் பார்க்கவும் இல்லை. அவர்கள் சொன்னது எல்லாம் திரும்பி முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எழுத வேண்டும் என்றார்கள். இருக்கின்ற ஒவ்வொரு விடையங்களுக்குமான தரவுகள் தேவை என அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
என்னடைய முன்னுரிமை சிந்தனைகளின் அடிப்படையிலே நான் இதனை ஒழுங்குப்படுத்தியுள்ளேன். உங்களுக்கு இது சரியான முறையில் முன்னுரிமை படுத்தப்படாது விட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து முன்னுரிமை படுத்துவோம் என தெரிவித்தேன். உங்களின் விருப்பத்திற்கமைவாக செய்வோம் என தெரிவித்தேன்.
-பின் இவ் விடயங்கள் ஒவ்வொன்றிற்கும் தரவுகள் தேவை என்று சென்னீர்கள். ஆனால் எடுப்பது என்பது முடியாத விடயம். மக்கள் மத்தியில் நான் சென்று பேச முடியாத நிலை வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ளது. சி.ஐ.டி மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களும் கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் மக்களிடம் சென்று ஆயர் என்ன பேசினார் என்று கேட்பார்கள். அதனை சென்னார்கள் என்றால் மக்களுக்கு கஸ்டங்களை கொடுப்பதோடு காணாமல் போகும் சம்பவங்களும் இடம் பெறும்.
ஆகவே நான் இந்த மக்களை துன்பப்படுத்த விரும்பவில்லை. துன்பத்தில் இட்டுச்செல்வதையும் நான் விரும்பவில்லை. நீங்கள் தேடுங்கள் தரவுகளை. எங்கெங்கெல்லாம் இவ்விடயங்களுக்கு தரவுகளை தேட முடியுமே, அல்லது கேட்டால் எடுக்க முடியும் என்பதனை நான் அரசாங்கத்திடம் பொறுப்பாக கொடுத்தேன்.
-அதன் பிற்பாடு இரு தடவைகள் வந்து கூட்டத்தை வைத்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இரண்டாவது கூட்டத்தில் சொன்னார்கள் மூன்றாவது கூட்டத்தை நடத்தி முக்கியமான ஒவ்வொரு விடயங்களுக்கும் பொறுப்பாகவுள்ள ஆட்கள், அரச ஊழியர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு விடயங்களையும் கையாளக்கூடியவர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களை அழைத்து வந்து மூன்றாவது கூட்டத்தை வைப்போம் என்றார்கள். தற்போது இரண்டு வருடங்களாக போகின்றது. எவ்விதக் கூட்டமும் இடம் பெறவில்லை.
நாங்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் எல்லா முயற்சிகளிலும் அரசாங்கம் ஒரு கண் துடைப்புக்காக செய்கின்றது.
உண்மையாக மக்களுக்கு விடுதலையை கொடுக்க வேண்டும். கடைசியாக ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உண்மையும் நீதியும் இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இல்லை.
தீமை செய்த மனிதர்களுக்கு முன்பாக தீமை செய்தவர்கள் வந்து தமது குற்றங்களை ஒப்புக்கொண்டு இரண்டு பகுதியினரும் அழுது கட்டிக் கெஞ்சக் கூடிய நிலமை ஏற்படும் போது தான் உண்மையான நல்லிணக்கத்துடன் கூடிய சமாதானம் ஏற்படும்.
இப்படியான ஒரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் அரசாங்கமும், அரசுடன் ஈடுபடக்கூடிய அரசியல் வாதிகளும் இணைந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சியை, நல்ல நோக்கத்தை வேறு திசைக்கு கொண்டு சென்று தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.
ஆனால் உண்மையாக நாட்டு மக்களுடைய ஆதங்கங்களையும், கவலைகளையும், அவர்கள் பட்ட துன்பங்களில் இருந்தும் விடுதலை கொடுக்க வேண்டும் பதில் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
-நிரந்தரமாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைக்குழு முன்னிலையில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே வந்தேன். என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
DSC03976
DSC03975
DSC03974
DSC04024
DSC03996
DSC03995

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...