வீரத் தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன் சிலைகள் யாழில் திறப்பு
முன்பதாக இந்துசமய சிவாச்சாரியார்கள் வேதம் ஒதியதைத் தொடர்ந்து ஆசிஉரைகளை வணபிதா ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மௌலவி சரபுல் அனாம் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பராமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி வாசஸ்பதி ரவீந்திரன் இசைத்தார்.
தொடர்ந்து எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களினதும் உருவச்சிலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்த அதேவேளை, மலர்மாலைகளும் சூட்டப்பட்டன.
இதன்போது நினைவுக்கற்களும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டன.
அடுத்து அங்கு யாழ்.மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்பு உரையினை யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேலும் தலைமையுரையினை நிகழ்வின் தலைவரும் நிகழ்த்தினார்.
தொடர்ந்து தமிழர்களின் தொன்மை வரலாறு மற்றும் குறித்த மூன்று அரசுகளினது வரலாறுகள் தொடர்பாக வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாண தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் வேல்நம்பி, யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் சத்தியசீலன் ஆகிய உரைநிகழ்த்தினர்.
பிரதம விருந்தினர் உரையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பம்சமாக மூன்று சிலைகளையும் வடிவமைத்த சிற்பாசாரியார் சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு சிற்பக்கலையரசு என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்த அதேவேளை, பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச்சின்னத்தையும் வழங்கி வைத்ததுடன், ஏனைய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மூன்றுசிலைகளையும் நிர்மாணிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சொந்த நிதியிலிருந்து 15 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ள நிலையில் யாழ்.மாநகர சபையும் சிறுநிதியையும் பங்களிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உள்ளிட்ட கல்விப்புலம்சார்ந்தோர், நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment